"இந்த சூரியனுக்கு நம்ம மேல அப்படி என்னாதா கோவமோ ? " என்று (இதை விட கேவலமாக ஒரு கதையை ஆரம்பிக்க முடியாது என்று ) நினைத்து கொண்டு மரத்தின் நிழலில் தன் நண்பனுக்காக காத்திருந்தான் தினேஷ் . தினேஷ் 5 அடி உயரம், தமிழனின் வண்ணம், அணைத்து உணவுக்கு சொந்தக்காரனின் இடை.
என்ஜினிற்கு படிப்பதற்கு 12 ஆம் வகுப்பில் போதுமான அளவில் மதிப்பெண் பெறாததால் , தனக்காக B.SC ( C.S) மற்றும் தன் அம்மாவுக்காக M.CA, படித்துவிட்டு இப்பொழுது ஒரு ஐடி துறையில் வேலை பார்த்து கொண்டிருக்கிறான் . முக்கால்வாசி ஐடி ஆட்கள் போல பார்க்கும் வேலை சலிப்புத்தட்ட , அவன் நீண்ட நாள் கனவான டாக்குமெண்ட்ரி/ சார்ட் பிலிம் எடுப்பதை பற்றி யோசித்துக்கொண்டிருந்தான் .
இவனுக்கு இவன் வேலை செய்த முதல் அலுவகலத்தில் தான் வெங்கட் பழக்கம் . முக்கால்வாசி ஐடி நண்பர்கள் போல இவர்களுக்கும் அலுவலகம் மாறியவுடன் இடைவேளை அதிகரித்ததே போனது.
தினேஷ், சூளைமேடுவில் இருந்து மதனந்தபுரம் வந்த பின்பு இருவரும் அடிக்கடி சந்திப்போம் என்று பேசி மட்டும் கொண்டார்கள் . 4 மாதம் கழிந்து இப்போது தான் சந்திக்க நேரம் கிடைத்தது . தினேஷ் அவன் மகனை போலவே சூளைமேடை நினைத்து ஏங்க தான் செய்தான். "சூளைமேடா இருந்தா நம்ம பிரகாஷ் அண்ணன் கடையில இந்நேரத்துக்கு ரெண்டு மிக்ஸர் ஜூஸ் அடிச்சிருக்கலாம்" என்று நினைத்து கொண்டிருக்கும்போதே வெங்கட் தூரத்தில் இருந்து இவனை பார்த்து கை அசைப்பதை பார்த்தான்.
"மச்சி எப்படி இருக்கே ?" என்று வெங்கட் ஆரம்பிக்கும் முன்பே " ..த்தா , எவ்ளவு நேரம் டா உன்னக்காக காத்திருக்கிறது ", என்று கடு கடுதான் தினேஷ். 10 வருடம் முன்பு கென்னை 45 பி பேருந்தில் முதல் நாளே 150 பேர் முன்பு கண்டக்டர் "..த்தா, சிலரை இல்லையா?" என்று கேட்டபோது அவமானமாக கருதியவன் தினேஷ்.இப்பொழுது ஒரு நாளில் எவ்வளவு முறை இந்த வார்த்தையை கூறுகின்றான் என்று கணக்கு வைக்க அந்த சித்ரகுப்தனும் கொளம்பிருப்பான் .
"மச்சி எப்படி இருக்கே ?" என்று வெங்கட் ஆரம்பிக்கும் முன்பே " ..த்தா , எவ்ளவு நேரம் டா உன்னக்காக காத்திருக்கிறது ", என்று கடு கடுதான் தினேஷ். 10 வருடம் முன்பு கென்னை 45 பி பேருந்தில் முதல் நாளே 150 பேர் முன்பு கண்டக்டர் "..த்தா, சிலரை இல்லையா?" என்று கேட்டபோது அவமானமாக கருதியவன் தினேஷ். இப்பொழுது போரூர் , DLF டிராபிக் போல் பழக்கமாகிவிட்டது .
"மச்சி, ஆபீஸ்ல லாஸ்ட் மின்னுட்டல மேனேஜர் கூப்ட்டாண்டா.". முக்கால்வாசி ஐடி ஆளுங்களுக்கே உரித்தான பொய்."மச்சி எப்படி இருக்கே ?" என்று மறுபடியும் வெங்கட் ஆரம்பித்தான் . "நல்லா இருக்கேன் மச்சி ! நீ எப்படி இருக்கே, வீட்ல எல்லோரும் எப்படி? .." , தினேஷ்.
தங்கள் பழைய நினைவுகள் , தங்கள் பொறுப்பு மிகுதியால் அவர்களுக்கு ஏற்பட்டிருக்கின்ற பணி சுமைகள், காசு இருந்தும் மன அழுத்தத்தால் இலக்கின்ற தூக்கம் பற்றி பேசுவதை பார்த்த பக்கத்தில் இருந்த இளநி விற்கின்றனர் இவர்களின் பிரச்சனையை பிரஸ்ட் வேர்ல்ட் பிரச்னையாக தான் பார்த்திருப்பார்.
"மச்சி, நம்ம ஏரியா எப்படி இருக்கு?" என்று மதனந்தபுரத்துக்கு வந்து சில மாதங்கள் தான் ஆகின்ற தினேஷிடம் கேட்டான் வெங்கட். "என்ன ஏரியா டா இது , 10 கடைக்கு ஒரு கடையுள்ள பிரியாணி கிடக்குது ஆனா வெயிலுக்கு ஒரு மிக்ஸர் ஜூஸ் கடை இல்லை, நைட் ஆனா ஒரு தெருவுக்கு 30 நாய் இருக்கு, எல்லா தெருவுக்கும் இப்பதான் ரோடு வருது, எங்க தெருவுல ரோடு போடற லாரி கூட வரமாட்டீங்குது , பக்கத்துல கிரிக்கெட் விளையாட ஒரு நல்ல கிரவுண்ட் இல்ல, பார்க் மட்டும் நெறைய இருக்கு." என்று அடுக்கி கொன்டே போனான் . வெங்கட் சென்னையிலே பிறந்து வளர்ந்தவன் , தினேஷ் சென்னை வந்த புதிதில் சூளைமேடு பற்றியும் இப்படி சொன்னதாக தான் ஞாபகம். இந்த அடுக்குகளை கேட்க மனமில்லாமல் , இடைமறித்தான் .
"உங்க ஏரியா மட்டும் ஒழுங்கா . நைட்ல எங்க நாய் மட்டும் தான் இருக்கு ஆனா உங்க ஏரியாவுல .... ????"
"எங்க ஏரியால என்னடா இல்ல . கெத்து ஏரியா டா. சாப்பாடுக்கு துர்கா பிரசாத், டாட்டா உடுப்பி , ராமச்சந்திர மெஸ், பம்பாய் சப்பாத்தி கடை, பக்கத்துலயே ஐஸ் கிரீம் கடை, பால்லுடா 40 ரூபாய்க்கு அந்த டேஸ்ட் எங்க தான் வரும், Loyalla fast foodla பீப் பிரை , ஜூஸுக்கு நம்ம பிரகாஷ் அண்ணா கடை, ராகவேந்திரா கலையான மண்டபத்து பக்கத்துல ஆந்திரா மெஸ் , கிரிக்கெட் விளையாட்றதுக்கு டிரஸ்ட் புறம் கிரௌண்ட் , காய்கறிக்கு அண்ணா நெடும்பாதை , ..." என்று மீண்டும் அடுக்கிகொன்டெ போனான் .
"..தா , போதும் டா உங்க ஏரியா புராணம் . நேத்து தான் பிரசாந்த் ஹாஸ்பிடல் போயிடு உங்க ஏரியா வழியா வந்தேன். நெல்சன் மாணிக்கம் ரோட்ல, புடவை கட்டிக்கிட்டு நல்ல மேக்கப் போட்டு ஒரு பொண்ணு லிப்ட் கேட்டது இருந்த. ரொம்ப லேட் இருக்கே, லிப்ட் தரலாம்னு பொண்ண மேட்டர். மேட்டர் என்னனா அது பொன்னே இல்ல. . போற போக்குல பாத்தா எல்லா காஸ்ட்யூம்லயும் ஒரு பொண்ணு நிக்கிது. பொண்ணா இல்ல வேறயான்னு கூட திரியால. பயந்து வண்டிய ஸ்பீடா விட்டேன். ஏரியாவுல ஏரியா. போவியா !!!".
தான் 10 ஆண்டுகளுக்கு மேலாக இருந்த இடத்தை பற்றி வெங்கி சொல்லும் பொது தினேஸ்கும் "1 நிமிடம் தலை சுத்திருச்சு." இவன் இதை பற்றி கேள்விபட்டிருந்தாலும் இந்த அளவுக்கு அதிகரித்திருக்கும் என்பதை நம்ப முடியவில்லை. அப்போதுதான் அவனுக்கு ஒரு பொறி தட்டியது . டாக்குமெண்ட்ரிக்கு இவர்களையே மீட் பண்ண என்ன என்று யோசிக்க ஆரம்பித்தான். யோசித்து கொண்டிருக்கும் போதே தினேஷின் மொபைல் ஒலித்தது , அவனது மனைவி . Call ஐ கட் செய்தான் . வேங்கியிடம் அடுத்து பார்க்கலாம் என்று சொல்லிவிட்டு விடை பெற்றான் .
தினேஷ் தினமும் மாலை வாக்கிங் / ரன்னிங் போவது வழக்கம் . மனைவி ஊரில் இருப்பதால் , வீட்டுக்கு சென்று ரன்னிங் உடைக்கு மாற்றிவிட்டு ஸ்ட்ராவா ஆப்பை ஸ்டார்ட் செய்து நடக்க தொடங்கினான் . மனைவிடம் போன் செய்து அவளையும், பிள்ளைகளையும் நலம் விசாரித்தான் . டாக்குமெண்ட்ரிக்கு கன்டென்ட் கிடைத்து விட்டதாகவும் , நாளைய அதை பற்றி சொல்வதாகவும் சொல்லிவிட்டு போன் கட் செய்தான். அன்று இரவி முழுவதும் சூளைமேடு மற்றும் அங்கு இருக்கும் தாசிகளை எப்படி அணுகவது பற்றியும் யோசனை செய்துகொண்டிருந்தான் .
"மனைவியிடம் என்னவென்று சொல்வது? அங்கு சென்று யாரை அணுகுவது? ரோட்டில் வைத்து அவர்களிடம் இருந்து வசவு வாங்கினால் என்ன நடக்கும் ? அவர்கள், பேச நேரம் தருவார்களா? போலீஸ் வந்தால் அவரிடம் என்ன சொல்வது ? வீடியோ எடுக்க விடுவார்களா? " எந்த கேள்விக்கு, விடை கிடைக்காமலே உறங்கி போனான் .
"மனைவியிடம் என்னவென்று சொல்வது?
மறுநாள், அவர் ஆபிஸ் மேனேஜர் இவன் உடனடியாக மலேஷியா செல்ல வேண்டும் என்றும், மறுநாள் காலை புறப்பட தயாராக இருக்க வேண்டும் என்றும் கேட்டுகொண்டார் . அங்கே மலையாசியா இவனுக்கு புதிதல்ல, அங்கு சென்றால் எப்போது வருவான் என்று எவன் மேனேஜருக்கும் தெரியாது . அங்கு போவதற்குள் சில கேள்விக்காவது பதில் தேடிவிட வேண்டும் என்று செய்தான். தான் ஊருக்கு போவதகர்க்கு பேக் செய்வேண்டும் என்று சொல்லிவிட்டு ஆபீஸ் நண்பர்களிடம் சொல்லிவிட்டு சென்றான் . அவன் திருபும் போது என்ன சரக்கு வாங்க வேண்டும் என்று பட்டியியல் இப்போதே வந்துவிட்டது .
கஸ்டமர்களுக்கு ரிமோட் சப்போர்ட் செய்தவன், தன் பேக்கிங்கிற்கு மனைவிடம் ரிமோட் சப்போர்ட் வாங்கும் அன்றாட நிகழ்வும் முடிந்தது. தயங்கி தயங்கி இன்று என்ன செய்யப்போகிறான் என்று மனைவிடம் சொல்லிவிட்டான் . தன் முதல் கேள்விக்கு பதில் நீண்ட நேர மௌனமும் வெறும் ஹ்ம்ம் என்ற பதில் மட்டுமே கிடைத்தது.
மாலை நேரம், தனக்கு பரிசித்திப்பெற்ற சூளைமேடு சென்றான். முதல் தரிசனம் பிரகாஷ் அண்ணா ஜூஸ் கடை என்று முன்பே முடிவு செய்திருந்தான் . கோடம்பாக்கம் ப்ளைஓவெர் கீழே பராமரிப்பு முன் குறைந்தபட்சம் பத்து ஜூஸ் கடைகள் இருக்கும். பராமரிப்புக்கு பின் இப்போது வெறும் மூண்று கடைகள் மற்றுமே இருந்தன . காலியான கடைகளில் பிரகாஷ் அண்ணா கடையும் ஒன்றாக இருக்கும் என்று எதிர்பாராகவே இல்லை. பிரகாஷ் அண்ணா விருதுநகரில் இருந்து வந்தவர் .தன் மாவட்டத்தில் இருந்து வந்ததால் தினேசுக்கு அவர் மீது கூடுதல் பாசம் . தன் மாவட்டத்துக்கே உரித்தான முகவெட்டு , வண்ணம், வெயில் மேல் அவருக்கு இருக்கும் காதல், முன் பல்லில் அவருக்கு விழுந்திருந்த சொத்தை, வேகவாக கொட்டிருந்த தலை முடி என எதாவது ஒன்று தன் ஊரில் யாரையாவது நினைவுகூரும் . ஏதோ ஒரு கடைக்கு சென்றான் , அவன் விரும்பி குடிக்கும் மிக்ஸ்ர் ஜூஸ் சொன்னான், அரை மனதாக ஜூசை குடித்திவிட்டு தன் நண்பர்களை பார்க்க சென்றான் .
நண்பர்களிடம் தன் டாக்குமெண்ட்ரி பற்றி சொல்ல அவனுக்கு மனம் வரவில்லை. நள்ளிரவு வரை கடத்தவே, நண்பர்களின் வீடு. இரவு சாப்பாடு, நியூ லயோலா பாஸ்ட் புடில் சிக்கன் பிரைட் ரைஸ் , பீப் 65 சாப்பிட்டுவிட்டு , தன பங்குக்கு, ஸ்மோடோ , இன்ஸ்டாகிராமில் பதிவுமிட்டு நண்பர்களில்டம் விடைபெற்றான் . மணி அப்போது இரவு 11.00, இன்னும் வெங்கி சொன்ன யாரும் நெல்சன் மாணிக்கம் ரோட்டில் இல்லை. எப்போதும் போல, டிரஸ்ட்புரம் கிரௌண்டுக்கு சென்று வண்டியை நிறுத்தி அடுத்த கேள்விக்கு பதில் யோசிக்க ஆரம்பித்தான் .
அங்கு சென்று யாரை அணுகுவது? ரோட்டில் வைத்து அவர்களிடம் இருந்து வசவு வாங்கினால் என்ன நடக்கும் ?
தினேஷ் சிறுவதில் இருந்தே பெண்களிடம் பேச கூச்சப்படுபவன் . பள்ளி பருவத்தில், ஒரு ஆசிரியை தன் சக மாணவியை அழைத்து வர தினேஷிடம் சொல்ல , அதை எதோ காதல் சொல்ல போவது போல் சென்று விழி பிதுங்கி நின்றது இவன் வகுப்பு மாணவர்கள் இடையே பெரும் கேலிக்கூத்தாக இன்றும் பேசப்படுகின்றது . இவன் இன்று , நள்ளிரவில் ஒரு தாசியை அணுகி , உரையாடவேண்டும் என்பது மிக பெரிய சவால். இது ஒருபக்கம் இருக்க, என்ன கேள்வி கேட்க வேண்டும் என்று யோசித்து கொண்டிருக்க நேரம் 12.15 ஆனது.
தினேஷ் நெல்சன் மாணிக்கம் சாலையை நோக்கி பெரும் பதற்றத்துடன் சென்றான். வெங்கி சொன்னது போல் , அங்கு ஜவுளி கடை பொம்மைகளை போல எல்லா உடைகளுடன் வருசையாக பாலினம் பாரத்தால் தெரியாதவாறு நின்றுகொண்டிருந்தனர் . தினேசுக்கு இருந்த பதற்றத்தில் நெல்சன் மாணிக்கம் ரோடு, சூளைமேடு ஹை ரோடு , ஹாரிங்டன் ரோடு என்று மூன்று அல்லது நன்கு முறை சுற்றிவிட்டான். அவன் கவனித்த வரை , கார்களும் , பைக்களும் அந்த திருநங்கைகள் முன்பு நிற்கின்றன , அரை நிமிடத்தில் வாகனம் அவர்களை ஏற்றி சென்று விடுகின்றது.
இவனுக்கு பதற்றம் இன்னும் இருப்பதால் அன்று இவனால் எந்த நபரையும் அணுகமுடியாது என்று எண்ணி கிளம்ப முடிவுசெய்தான் . ஹாரிங்டன் ரோட்டில் இருந்து சூளைமேடு போகும் வழியில் கூவம் பிரிட்ஜ் அருகே யாரு ஒரு நபர் புடவை அணிந்துகொண்டு இவனே செய்கை காட்டி அழைத்தது போல் தோன்றியது . அவன் பின்னே யாரையாவது இருக்கும் என்று இன்னும் கடக்கும் போது "கருப்பு சட்டை சார் " என்றது அந்த குரல் . அவன் எந்த நிறத்தில் சட்டை அணிதிர்கிறான் என்பது அப்போதுதான் சரி பார்த்தான் . இவனை தான் அந்த திருநங்கை அழைத்திருக்கிறாள் . என்ன செய்யலாம் என்று இவன் தீர்மானிக்கும் முன் இவன் வண்டி தீர்மானித்து நின்றது . தினேசுக்கு அவன் உடலில் உள்ள எந்த பகுதியும் அவன் சொல்வதை கேட்கவில்லை . அவன் மூளையும் கூட . அந்த நபர் , வேகமாக இவனை நோக்கி வருவதை உணர்ந்தான் .
"என்ன சார் வெக்கமா? இல்ல முதல் தடவையா ? " என்றால். இவன் அவளை பார்க்க கூட இல்லை, வண்டியை ஸ்டார்ட் செய்ய முயற்சித்து கொண்டிருந்தான்.
"சார்? என்ன ஸ்டார்டிங் ப்ரோப்ளேமா ?" என்றல் அவள் .
"ஆமா. திடிர்னு நின்னுடுச்சி." என்றான் தினேஷ் .
அவள் சிரித்துகொன்டே "நான் வண்டிய கேக்கல சார். " என்றால். சொல்லிவிட்டு பலமாக சிரித்து தன் துணைக்கு நாய்களும் சேர்த்து ஊளமிட்டு சிரிக்க செய்தால். கோவத்தில் தினேஸ்குக்கு முகம் மாறியது .
"சார் , தப்பா நின்னுச்சிக்கிங்க , நீங்க இங்கேயே சுத்திட்டு இருந்தது பாத்தேன். அதான் கேட்டேன் . எங்க கிட்ட முத தரவ வரவங்க பாதி பேர் ஓட்டுக்கு முதல் தரவ ரூவா வாங்கறது கூச்ச படர மாதிரி கூச்ச பாடுவாங்க , அதான் நானா கேட்டேன்."
"நானும் உங்கள பாக்க தான் வந்தேன் ." என்றான் தினேஷ் வாக்காள கூச்சமாக.
"அப்படி வாங்க வழிக்கு. இப்போவது வண்டி ஸ்டார்ட் ஆகுமா?" என்று மீண்டும் அவள் சத்தமாக சிரிக்க , தெரு நாய்களும் சேர்த்துக்கொண்டன.
"வண்டி வேண்டாம். கொஞ்ச நேரம் தான் , உங்க கிட்ட பேசலாமா?" என்றான் தினேஷ் சற்றே தயக்கம் தெளிந்தவனாக.
அவர்கள், பேச நேரம் தருவார்களா?
"என்கிட்ட என்ன சார் , பேச போரே ? பேரம்மா ?" . தினேஷ் எதிர்பார்த்தது போல மீண்டும் கணீர் சிரிப்பு.
"இல்ல . டாக்குமெண்ட்ரி எடுக்கலாம்னு !!"
"என்ன வச்சா? "
"பேஸ் மாஸ்கிங் பன்னிரலாம் . உங்கள யாருக்குமே தெரியாத மாதிரி காட்டிறலாம் " என்றான் . இப்போதுதான் அவள் முகத்தை பார்த்தான் தினேஷ் . அவன் கண்களில் வியப்பும் , பதற்றமும் கூடுதலாக தெரிந்தது . இவளின் முகவெட்டு தன் மாவட்டத்தின் முகவெட்டாகவும் , உச்சரிப்பிலும் , அவள் உடுத்திருந்த கட்டம் போட்ட புடவை, , அகன்ற நெற்றி , நெற்றில் உச்சியில் போடு , போட்டுக்கு கீழே திருநீர் என்று கொஞ்சம் தனது மாவட்டத்து பெண்களை நினைவு படுத்தியது .
"நீங்க , விருதுநகரா?" என்றான்
"இல்ல சார் " என்றால் சட்டென்று . இந்த முறை கேலி கேள்விகளும் இல்லை , கனத்த சிரிப்பும் இல்லை.வெறும் புன்னைகை மற்றும் . நாயின் சிறு ஊளையுடன் நிறுத்தியது . அவளது சிரிப்பை எதிர்பார்த்து ஏமாந்ததை போல .
"உங்ககிட்ட கொஞ்சம் பேசணும் . கேள்வி கேக்கணும் . நீங்க தப்பா எடுத்துக்களான , நீங்க ஒரு மணி நேரத்து எவ்வளவு வாங்குவீங்களோ அத நான் தந்திரன் ". என்றான்
இம்முறை பலத்த சிரிப்புடன் " சார் , நீ கேள்வி கேளு சார் . எப்பவுமே எங்க கிட்ட கேள்வி கேட்டா நாங்க தான் துட்டு தரணும். புரியலையா சார் . நம்ம ப்ரொடெக்ட்டர் சொன்னேன் சார்.அதான் சார் போலீஸ்"
"அவங்க உங்க கிட்ட என்ன கேள்வி கேப்பாங்க ?" இம்முறை ஆர்வத்துடன் கேட்டான் .
"என் கிட்ட மட்டும் இல்ல சார், அந்த பாலத்துல தூங்கிட்டு இருக்கானே அந்த ஆள் கிட்ட கூட அதே கேள்வி தான் கேப்பான் . 'இநேரத்துக்கு இங்க என்ன பன்றே . இங்க இருக்க கூடாது .' எங்களுக்கு என்னமோ இந்த கவர்மெண்ட் மாளிகை கட்டிக்குத்த மாரி . அப்புறம் காசு வாங்கிட்டு உட்ருவாங்கோ". இம்முறை அவள் குரலில் சோர்வு தெரிந்தது . "அத்த உடு சார், நீ என்ன கேக்கணும் ?"
"நீங்க எப்படி இங்க வந்திங்க ? ஏன் இந்த தொழில் பண்றிங்க ?"
"என்ன சார் நீங்க , எதோ புதுசா கேட்கப்போறிங்க பாத்தா !! இதுக்கு நான் பதில் சொல்லணும்னு இல்ல சார். யூடுபிள பாருங்க , ஆயரம் வீடியோ இருக்கு இத பத்தி. இதுக்கு எதுக்கு சார் இன்னொரு டாக்குமெண்ட்ரி." என்று அவள் சொல்லிக்கொண்டிருக்கும் போதே , தினேஷ் மனைவிடம் இருந்து தொலைபேசி அழைப்பு .
தினேஷ் அந்த அழைப்பை துண்டித்தான் .
"யார் சார் , வைபா?"
"ஆமா ".
"ஏன் சார் கட்பணிங்க. இந்த நேரத்துல அவங்க போன் பண்றங்கனா ஏதாவது இருக்கமல ."
"இல்ல. அவளுக்கு இதான் வேல . டிவி ப்ரோக்ராம் எல்லாம் முடிச்சிட்டு, பொழுது போயிருக்காது . அவ அப்பவே சாப்டேனானு மெசேஜ் பண்ணா . ரிப்ளை பண்ணல , அதனால , திரும்ப கால் பண்றா . நான் என்னமோ கொழந்த மாதிரி."
"சொன்னா தப்பா நேனுச்சுக்காதே . எங்க வாழ்க்கை எல்லாம் ஓரே மாதிரி தான் . எல்லார்க்கும் கல்கி சுப்ரமணியம் , பத்மினி பிரகாஷ் மாதிரி ஆகணும் ஆசை தான் ஆனா எல்லாராலயும் அவங்க மாதிரி ஆக முடியறதில்லை ."
இதையும் பலத்த சிரிப்போடு அவள் சொல்ல, ஒடுக்க பட்ட அனவைரும் எப்படி தங்கள் வழியை சிரிப்போடு எதிர்கொள்கிறார்கள் என்ற ஆச்சரியம் தினேஷை என்ன வைத்தது . அவள் தொடர்ந்தால் .
"சார், எல்லா நாட்லயும் மக்கள் 7 வகையா பிரிஞ்சிருக்காங்களாம் . நம்ம நாடு மட்டும் ஸ்பெஷல். எட்டாவது வகை ஒன்னு இருக்கு. அதான் சாதி . நான் இன்னும் ஸ்பெஷல் , இந்த எட்டு பிறவிலையும் ஒடுக்க பட்டவ." இம்முறை , சிரிப்பு இடிபோல இருந்ததது .
"நீ எங்காவது வேலை செரியா சார்"
"ஆமா , சாப்ட்வேர் என்ஜினீயர்" என்றான் தயத்துடன் .
"அப்பறம் எதுக்கு சார் , இந்த டாக்குமெண்ட்ரி வேல "
"செய்ற வேலை புடிக்கல, அது தவிர இதான் என் passion."
"உன்னக்கு தெரிஞ்சு யாராவது அவங்க செய்ற வேலைல சோர்வு இருந்தாலும் அத்த ரொம்ப பிடிச்ச மாதிரி செஞ்சு பாத்திருக்கியா சார்? வேல செஞ்சு வேல செஞ்சு , அப்புறம் அத வெறுத்து , அப்புறம் மத்தவங்களுக்காக அதே புடிச்ச வேலையா மாத்திக்கிட்டு , நீ சொல்ற Passion இருந்தும் அத டெய்லி போடற குப்பைல போட்டுட்டு வேல பாக்கிற ஆள உன்னக்கு தெரியுமா சார் ?
"இல்ல ."
"இல்லையா . நல்லா யோசிச்சு பாருங்க?"
"இல்ல அப்படி யாரும் சத்தியமா இல்ல!!"
"இருகாங்க சார். ஒன்னு நானு , இப்போ தெருஞ்சுகிட்டவ, இன்னோனு உங்க வைப்"
"உங்க வைப் மாதிரி பொண்ணுக்காக தான் இப்போதைக்கு டாக்குமெண்ட்ரி/ஷார்ட் பிலிம் எல்லாம் தேவைப்படுது சார். நல்லா யோசிச்சுப்பாருங்க , எங்களுக்கு ஒரு மணி நேரத்துக்கு உழைச்சா ஊதியம் , நாங்க நெனச்சா லீவு , நாங்க எங்க போனும்னு நெனைக்கிறோமோ உடனே கெளம்பி போயிரலாம். இதுலே எதாவது உங்க வைப் செய்ய முடியுமா ? அதுவும் கொழந்த பிறந்த பிறகு. என்னக்கு நல்லா தெறியும் சார் , உங்களுக்க அவங்க பஸ்ஸின் என்னனு கூட தெரியாது. மறுபடியும் சொல்றேன் , உங்க வைப் மாதிரி வாழறத விட நான் சுதந்திரமா, மரியாதையா தான் வாழறேன்"
இது தினேஷால் ஜீரணிக்கவே முடியவில்லை . ஒரு தாசிக்கு இருக்கும் சுதந்திரம் / மரியாதை தன் மனைவிக்கு இல்லையா என்று அவனால் யோசித்து பார்க்க கூட முடியவில்லை . அவன் கைகள் பட படத்தன . தன் இதய துடிப்பு அதிகரித்திருப்பது அவனின் ஸ்மார்ட் வாட்ச் வைப்ரேட் செய்து காட்டி கொடுத்தது . அவன் மணவையின் பேசன் என்ன வென்று தான் கேட்டிருப்போம் அனால் மறந்திருப்போம் என்று அவனை தேற்றிக்கொள்ள முயற்சித்தான் .
"என்ன சார் , அவங்க பேஷன் என்னனு யோசிக்கிறயா . அதையும் வாட்சப்பில பேசியிருக்கலாம்ல யோசிக்கிறயா. இப்பெல்லாம் வீட்டுக்குள்ள பேசுறது வாட்ஸாப்ப் ஸ்டேட்ஸ்ல போடறது மாதிரி ஆயிடிச்சு சார் . மாக்ஸிமிம் 24 மணி நேரம் தான் மைண்ட்ல நிக்கிது."
"நீ வூட்ல டீவி சீரியல் பாப்பியா சார் ?"
"சே சே , இல்ல."
"உங்க வைப் ?"
"நல்லா . முக்காலகவாசி நேரம் அதுலதான்!!"
"அதுதான் பெரிய கொடுமையே சார் . நம்மூர் டிவி சீரியல் யாராவது பாக்ராங்கனா அவங்க அவ்வளவு தனியா இருக்காங்கன்னு அர்த்தம் சார்.அவங்க வாழ்கை எந்த அளவுக்கு போர் அடிச்சா அவங்க டீவி சீரியல் பாக்கிறது பிடிச்சிருக்கு பாருங்க . அதுவும் நம்ம ஊரு டீவி சீரியல் . நம்ம ஊர்ல வீட்ல இருக்கிரே ஆளுங்கக்குள்ள நேரம் செலவு செய்ய ஆரம்பிச்ட்டோம் , அப்புறம் பாதி டீவி சீரியல் காணாமலே பூடும் ."
"சார்,என் கிட்ட பேசுறது கூட நீ காசு குடுக்கிறதுக்கு தயாரா இருந்த சார். உங்க வைப் போன் / மெசேஜ் பண்ணி நீ இன்னும் ரிப்ளை கூட பண்ணல சார்."
"நீ டாக்குமெண்ட்ரி / ஷார்ட் பிலிம் / ஷார்ட் ஸ்டோரி எதாவது எடுக்கணும் , எழுதணும்னா உங்க வைப் மாதிரி ஆளுங்கள்கிட்ட கேள்வி கேளு சார். பாஹுபலி மாதிரி நெறய பார்ட் எடுக்கலாம். போ சார் , பொய் பேசவேண்டியவங்க கிட்ட பேசு சார். இது பேசுறதுக்கான இடம் இல்ல. முக்கால்வாசி பெரு மாதிரி தப்பான இடத்துல தப்பான விஷயம் பண்ணிக்கிட்டு ." என்று சொல்லிவிட்டு அவளின் பலத்த சிரிப்புடன் முடித்தால் . இம்முறை நாயின் சத்தமோ ஊளையோ இல்லை .
இதற்கு மேல் அவனால் அங்கு இருக்க முடியவில்லை. அவனுக்கு எதோ கசப்பது போன்று தோன்றியது. அது உண்மையாக மற்றும் இருக்க கூடாது என்று வேண்டி கொண்டான் .
தினேஷ் அவளுக்கு நன்றி சொல்லிவிட்டு , பைக்கில் ஏறினான் அவளுக்கு தர சம்மதித்த பணத்தை தர மறந்து . அவளுக்காக இனொரு வாகனம் நின்றதது . தினேஷ் தன் மொபைல் எடுத்து டயல் பெட் ஓபன் செய்தான் , மனைவியின் மிஸ்ஸட் கால் பார்த்தான், தாசியின் சிரிப்பு சத்தம் ஆரம்பம் ஆனது , தூரத்தில் நாயின் ஊளை , மற்றோர் உரையாடல் ஆரம்பமானது .